தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடக்கும் இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் இப்போது தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டுக்கு முன்பாக அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் பட்ஜெட்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் பற்றிக் கூறியுள்ளார். அகழ்வாய்வு பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் அந்த இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.