Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் அகாடமி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் மனித உரிமை ஆணையாளர் விசாரணை!

நீட் அகாடமி மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் மனித உரிமை ஆணையாளர் விசாரணை!

J.Durai

, சனி, 19 அக்டோபர் 2024 (17:23 IST)
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே ஜல் என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இந்த நீட் அகடாமியில் சுமார் 80 மாணவ மாணவிகள் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
 
இந்த பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜவாலுதீன் அகமது வெட்டியாளன் என்பவர் நடத்தி வருகிறார் நெல்லையை தலைமை இடமாகக் கொண்டு இரண்டு மையங்கள் இவரால் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் முறையாக படிக்காமல் வகுப்பறையில் செயல்பட்டதாக தெரிகிறது இந்த நிலையில் மாணவர்களை கண்டிக்கும் விதமாக மூங்கில் பிரம்பால் அடித்துள்ளார் மேலும் மாணவிகள் காலணிகளை முறையாக கழட்டிவிட்டு வராமல் இருந்ததால் காலனிகளை கொண்டவர்கள் மீது எறிந்ததாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மையத்தின் வார்டன் அமீர் உசேன் என்பவர் நிர்வாகத்திடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டு வார்டன் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சூழலில் சிசிடிவி காட்சிகளுடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த சூழலில் மாணவர்கள் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பெயராக பரவியது செய்தி ஊடகங்களிலும் இந்த தகவல்கள் வெளியான நிலையில் நெல்லை மாவட்டத்தில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தலைமையிலான முகாம் அலுவலகம் இன்றைய தினம் செயல்பட்ட சூழலில் இந்த விவகாரம் தொடர்பான தகவலை அறிந்து சம்பவம் நடைபெற்ற நீட் அகாடமிக்கு நேரடியாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் சென்று விசாரணையை தொடங்கினர்.
 
வருவாய் துறை காவல் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நடக்கும் விசாரணைக்கு வருகை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தியதுடன் காயங்களையும் நேரடியாக பார்வையிட்டார் இந்த சூழலில் காவல்துறையின் உதவி ஆய்வாளர் ஒருவர் மட்டுமே விசாரணையில் ஆஜராகி வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்தார் ஆணையம் உத்தரவிட்டும்  உயர் அதிகாரிகள் யாரும் ஆஜராகாமல் இருந்ததால் அனைவரையும் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையுடன் சென்னைக்கு வர அறிவுறுத்தினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டதில் மாணவர்கள் தாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை மேற்கொண்டுள்ளது காவல்துறை இந்த விவகாரத்தில் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை முறையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற நீட் அகாடமி வளாகத்திற்கு வருகை தந்த மாணவர் அமைப்பினர் பள்ளி கல்லூரிகளிலேயே மாணவர்களை அடிப்பதை அரசு கண்டித்து வரும் சூழலில் தனியார் அகாடமியில் இது போன்ற செயல் நடப்பது வேதனை அளிக்கிறது இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
இந்த நிலையில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் நீட் அகாடமி உரிமையாளர் ஜலாலுதீன் அகமது வெட்டியாளன் மற்றும் நிர்வாகிகள் மீது மாணவர்களை காலணிகளால்  தாக்குதல், ஆயுதம் கொண்ட தாக்குதல் சிறார் குற்றம் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் மேலும் வருவாய்துறை அதிகாரிகளும் நீட் அகாடமிக்கு சென்று விசாரணையை செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவு பரிமாறிய - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்....