Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்

Advertiesment
அண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்
, செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:21 IST)
குடிபோதையில் அண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை அண்ணன் குத்திக் கொலை செய்தார்.


 
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா.  இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ் (வயது28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
 
இதில் மாதப்பனுக்கு  திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். மாதப்பன் கட்டிட தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி நாகராஜ் கார்பெண்டர். நாகராஜ்ஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி நாகராஜுக்கும், மாதப்பன் மனைவி வரலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜ் குடித்துவிட்டு அவரது அண்ணி வரலட்சுமியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த  மாதப்பன் நேற்று  காலை நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில்  நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், மாதப்பன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
 
இதுகுறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவர் அடித்து கொலை! மணலி புதுநகர் அருகே பயங்கரம்