Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகவிருந்த தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (14:59 IST)
திருமணமாகவிருந்த தங்கையை அவரது அண்ணணே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகள் ஹேமலதா. சிவசுப்பிரமணியனுக்கும் அவரது அண்ணனுக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பதாரிடையேயும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமாவிற்கு, இன்று நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனையறிந்த சிவசுப்பிரமணியனின் அண்ணன் மகனான சக்திகுமார் நேற்றிரவு, சிவசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திகுமார், சிவசுப்பிரமணியனை தான் கொண்டு வந்த கத்தியால் தாக்கியுள்ளார்.
 
இதனையடுத்து சண்டையை தடுக்க போன ஹேமாவையும், சிவகுமார் சரமாரிய கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஹேமா பரிதாபமாக உயிரிழந்தார். 
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிவகுமாரை கைது செய்தனர். ஹேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சிவசுப்பிரமணியன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments