Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவருக்கு திருமணமே அப்படித்தான் நடந்தது - ஜெயக்குமார் தம்பி பகீர் தகவல்

Advertiesment
அவருக்கு திருமணமே அப்படித்தான் நடந்தது - ஜெயக்குமார் தம்பி பகீர் தகவல்
, புதன், 24 அக்டோபர் 2018 (13:40 IST)
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது.


சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.   
 
ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 
 
இந்நிலையில், ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமாரின் சகோதரர் சாந்தகுமார் “என் அண்ணனின் நடவடிக்கையால் நாங்கள் அனைவரும் அவமானம் அடைந்துள்ளோம். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என் குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார். என் அண்ணிக்கும் அவருக்கும் திருமணம் எப்படி நடந்தது என்று அவரிடம் கேளுங்கள். அதன்பின் நான் அதுபற்றி பேசுகிறேன். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில் நானே ஆதாரத்தை வெளியிடுவேன்” என அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு சீயோல் அமைதி விருது...