வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்கள்
தமிழகத்தின் நிவர் புயல் நெருங்கி வரும் நிலையில் கடந்த பல மணி நேரங்களாக சென்னை முழுவதும் கனத்த மழை பெய்யும் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே
குறிப்பாக சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் ஐந்து அடிகளுக்கு மேல் தண்ணீர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் காரணமாக சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பழுதடைய வாய்ப்பு இருக்கிறது
2015ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் பைக்குகள் புயல் நேரத்தில் டேமேஜ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்கள் மற்றும் பைக்குகளை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக தற்போது அதன் உரிமையாளர்கள் புதிய ஐடியா ஒன்றை செய்துள்ளனர்
தற்போது வாகனங்கள் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேம்பாலங்கள் காலியாகத்தான் உள்ளன. இதனை அடுத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். கார் பார்க்கிங் போலான மேம்பாலங்கள் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது