வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை திருட்டு.

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (23:41 IST)
மயிலாடுதுறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை திருட்டு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை:- 
 
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜீ  பிரியா தம்பதியினர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் பிரியா நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜீ காலையில் வழக்கம்போல் தனது வீட்டினை பூட்டிவிட்டு மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். பின்னர் பணிகளை முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பீரோவில் வளையல் மற்றும் செயின் , ஆரம் உள்ளிட்ட ஐந்தரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ராஜீ அளித்த புகாரின்  பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments