சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (08:13 IST)
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் மர்ம நபர்களால் ஓட விட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற குத்துச்சண்டை வீரர் தனது வீட்டின் அருகே நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் அரிவாள் உடன் வந்து தனுஷை சரமாரியாக வெட்டியது. அவரது நண்பர்கள் தடுக்க முயன்ற போது அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக தெரிகிறது.

 இந்த நிலையில் தலை கழுத்து என உடல் முழுவதும் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களால் ரத்த வெள்ளத்தில் மிதந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே சில நிமிடங்களில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடமாட்டம் அதிகம் உள்ள சென்னையின் முக்கிய இடத்தில் இந்த கொலை நடந்துள்ள நிலையில், கஞ்சா மற்றும் போதை விவகாரம் தான் இந்த கொலைக்கு காரணம் என  தனுஷ் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 குத்துச்சண்டை வீரர் ஒருவர் சென்னையில் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments