Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. எந்த இணையதளத்தில்?

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (08:08 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2  முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் ஆய்வு உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிலை தேர்வு எழுதி நடைபெற்றது.

சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியாகி அதன் முடிவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையில் பிப்ரவரி 8 மற்றும் 23ஆம் தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில்  டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments