தமிழகத்தில் உள்ள கடைகளில் வெளிநாட்டு தயாரிப்புகளான கோக் மற்றும் பெப்சி ஆகியவற்றின் இடத்தை, தமிழக தயாரிப்பான போவண்டா விரைவில் பிடிக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அறவழியில் போராடினர். இந்த போராட்டத்தின் போது பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கம் பெப்சி, கோக் போன்றவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்கம் கூறியது. இந்நிலையில் வரும் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. அதேபோல், உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என வணிகர் சங்க நிர்வாகிகள் கூறினர்.
இதன் காரணமாக, இதுவரை தமிழகத்தில் கோக், பெப்சி உள்ளிட்ட பல குளிர்பானங்கள் பிடித்த இடத்தை, தமிழக காளிமார்க் நிறுவனத்தின் தயாரிப்பான போவண்டோ விரைவில் பிடிக்கும் எனத்தெரிகிறது.