அட்ரெஸை கரெக்டா சொல்லி வெடிகுண்டு மிரட்டல்! ! ஆசாமியை அலேக்காக தூக்கியது போலீஸ்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (10:18 IST)
இருப்பிடத்தை தெளிவாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 15-ந் தேதி இரவு 11.30 மணிக்கு ஒரு ஆசாமி, போனில் அழைத்தார்.  அதில் பேசிய ஆசாமி ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பலருக்கு தொடர்பு இருக்கும் போது 4 பேரை மட்டும் கைது செய்தது ஏன்? அனைவரையும் கைது செய்யாதது ஏன்?. சரியான நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வெடிக்கும். முடிந்தால் எடுங்கள்’ என்று மிரட்டினார். 
 
மேலும் தனது பெயர் மார்ட்டின் மரியதாஸ் என்றும் கோவை சவுரிபாளையம் கல்லறை தெருவில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று பேசுவதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் தான் மார்ட்டின் மரியதாஸ் (30) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்