Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இந்த முறை சென்னை அல்ல கோவை..!

bomb threat

Mahendran

, திங்கள், 24 ஜூன் 2024 (10:16 IST)
கடந்த சில நாட்களில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பதும் இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது பெரும் வதந்தி என்றும் கூறப்பட்டது.

சென்னை விமான நிலையம் மட்டும் இன்றி கவர்னர் மாளிகை உள்பட ஒரு சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி வந்து கொண்டிருப்பதை அடுத்து இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தை அடுத்து தற்போது கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈமெயில் மர்ம நபர் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் மூலம் சோதனை செய்து வருவதாகவும் அவர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எந்த வெடிகுண்டு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதுவும் ஒரு வதந்தியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி-2024!