Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலே பாபா கூட்டத்தில் விஷ பாட்டில்? சாவுக்கு இதான் காரணமாம்!? - வக்கீல் சொல்லும் புதுக்கதை!

Prasanth Karthick
திங்கள், 8 ஜூலை 2024 (09:32 IST)

உத்தர பிரதேசத்தில் போலே பாபா கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில் அதற்கு காரணம் சில விஷமிகளே என அவர்கள் கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 80 ஆயிரம் பேர் மட்டுமே கூடக்கூடிய இடத்தில் 2.5 லட்சம் பேர் கூடிய நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
 

ALSO READ: செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. ஐடி ஊழியரின் மனைவி, மகள் பலி..!

சமீபத்தில் இந்த சம்பவம் குறித்து பேசிய போலே பாபா, ஆன்மீக கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்து கூட்ட நெரிசலை ஏற்படுத்திவிட்டதாக விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது கூட்ட நெரிசல் குறித்து பேசியுள்ள போலே பாபாவின் வழக்கறிஞர், ஆன்மீக கூட்டத்தில் விஷ பாட்டில்களோடு சிலர் தோன்றியதை பக்தர்கள் சிலர் பார்த்து, அதை போலே பாபாவிடம் சொன்னதாகவும், விஷ பாட்டில்களை கொண்டு வந்த நபர்கள் தப்பி செல்ல கார்களை தயாராக அவர்கள் வைத்திருந்ததாகவும், அவர்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் புதுக்கதையை சொல்லியுள்ளார். 121 பேரை பலி கொண்ட இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சாமியார் பெயர் சேர்க்கப்படாததுடன், புதுப்புது விளக்கங்களை கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments