சென்னை மெரினாவில் படகு சேவை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்
இன்று சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது அப்போது அவர் சென்னை மெரீனாவை மேலும் அழகுபடுத்துவதற்காக 10 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும், சென்னை மெரினாவில் படகு சேவை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்
மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு சொகுசு கப்பல் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் மின்னும் வகையில் ஒளியூட்ட படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மதிவாணன் தெரிவித்துள்ளார்