தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் என்பவர் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்......
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று வெறும் 7500 கோடிக்கு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வந்துள்ளார். ஆனால் எவ்வளவு முதலீடு வரும் என்று தெரியாது.
தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு
கடந்த ஐந்து ஆண்டுகளில்
10 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதலீடு என்பது 87 ஆயிரம் கோடி மட்டும் தான். இது வெறும் 9 சதவீதம் தான்.
அந்த அடிப்படையில் இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கு சென்று வந்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து சதவீதம் மட்டும்தான் முதலீடாக வரும். வெறும் 750 கோடி தான் முதலீடாக வரும். இந்த பயணத்தை நான்
தோல்வியாக பார்க்கிறேன்
மற்ற மாநில முதல்வர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றால் 50 ஆயிரம் கோடி எண்பதாயிரம் கோடி என்ற நிறைய பெற்று வருகிறார்கள்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாளர்
காவிரி குண்டாறு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் .வைகையுடன் இணைக்க வேண்டும்.
தாமிரபரணி நம்பியாறு பச்சையாறு திட்டம் தொடர்ந்து இழுபறியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வீணாக வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது.
நீர் மேலாண்மையில் தோல்வி அடைந்துள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு இயற்கை பேரிடர் வெள்ளத்தில் இருந்து இன்னும் மீளவில்லை
சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மோசமாக உள்ளது.
மது ஒழிப்பு என்று சொன்னாலே தமிழ்நாட்டு அரசியலில் பாடுபடுகிற ஒரே கட்சி பாமக. பாமக கட்சி.
கட்சி தொடங்கப்படுவதற்கு முன்னாலே பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
கோவில்பட்டியில் மது ஒழிப்பு மாநாடு நடத்திய உள்ளோம். இதுவரை மதுவை எதிர்த்து போராடி
15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்றார்கள்.
பூரண மதுவிலக்கு கொள்கையை எந்த கட்சி ஏற்றுக்கொண்டால் அதற்கு காரணம் பாமக தான்.
மதுக்கடையை மூடினால் நிலைமை வேறு விதமாக மாறிவிடும் என அமைச்சர் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத ஒரு சூழலுக்கு கொண்டு வருவது தான்
திராவிட மாடல். எல்லோரையும் குடிகாரர்கள் ஆக்கி இளைஞர்களை நாசப் படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.மூன்று தலைமுறை நாசம் ஆகிவிட்டது.அரசுக்கு வருமானம் வருவதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் நலம் வளர்ச்சி
சமூக பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் முடிவெடுக்க வேண்டும். இன்னும் இருக்கக்கூடிய இரண்டு ஆண்டுகளில் எத்தனை மதுக்கடைகளை மூட போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள்.
மது ஒழிப்பு மாநாடு போராட்டம் கூட்டம் யார் எந்த கட்சி நடத்தினாலும் ஆதரிப்போம்.
திருமாவளவன் நடத்தினாலும் சரி யார் நடத்தினாலும் சரி நாங்கள் ஆதரிப்போம். இது எங்கள் கட்சியின் மையக் கொள்கை.
ஆனால் ஒன்றே ஒன்று....
பாமக சாதி கட்சி என்று
எங்களை இழிவுபடுத்தாதீர்கள். அப்படி என்றால் நீங்கள் என்ன கட்சி?.... ஒரு கட்சியை கொச்சைப்படுத்தக் கூடாது.
கல்வி சுகாதாரம் சுற்றுச்சூழல் சமூகநீதி மது ஒழிப்பு என பல்வேறு கொள்கைகளை வைத்து கட்சி நடத்துகிறோம். பாமகவால் பல மாற்றங்களை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் கொண்டு வந்துள்ளோம். உங்களால் எத்தனை மாற்றங்கள் வந்துள்ளது என்று சொல்லுங்கள். ஒன்று கூட கிடையாது.
அப்படிப்பட்ட பாமக கட்சியை எப்போது கொச்சைப்படுத்துவது தப்பு.
திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும். இது அன்பான வேண்டுகோள்.
2026 தேர்தலில் மட்டுமல்ல
அடுத்த வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான்.
பள்ளிகளில் அரிவாள் கலாச்சாரம் தொடர்கிறது. நீதி போதனை வகுப்புகள் கற்றுத்தர வேண்டும். அரிவாள் கலாச்சாரம் மீது.கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் மீது மட்டுமின்றி பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடும் பயமும் வரும்.
2026 தேர்தலில் நிச்சயமாக திமுக ஆட்சி கிடையாது . விவசாயிகள் பெண்கள் மாணவர்கள் திமுக ஆட்சி மீது கோபமாக இருக்கிறார்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. சட்ட ஒழுங்கு மது பஞ்சாப்கஞ்சா போதை பொருட்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் இதில் கவனம் செலுத்தாமல் உள்ளார்.
இதில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டு மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.