Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா தற்கொலைக்கு பழிக்கு பழி.! 3-பேர் கொலை குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Cuddalore Arrest
, வெள்ளி, 19 ஜூலை 2024 (15:40 IST)
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, சுரேஷ்குமார் தம்பதியினர். சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 70 வயதான நிலையில் உடல்நலமின்றி கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். 
 
இவர்கள் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். தற்போது கமலேஸ்வரி அவரது மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் ஆகியோர் வசித்து வந்தனர். சுகந்த குமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே அவர் மனைவி பிரிந்து சென்று விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். 
 
சுகந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் 15 நாட்கள் அலுவலகத்திலும் 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அதே தினம் கமலேஸ்வரி அவரது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அவரும் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களின் வீட்டு வேலை செய்யும் பணி பெண் சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வெளி இரும்பு கேட் பூட்டி இருந்த நிலையில் அவர் மீண்டும் சென்றுள்ளார். 
 
அதன் பிறகு அவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது தொலைபேசி எண் அனைக்கப்பட்டிருந்தால் அவரும் இரண்டு நாள் வேலைக்கு செல்லவில்லே.  இதனையடுத்து திங்கள்கிழமை வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து கடும் துர்நாற்றத்துடன் புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவலளித்தனர். 
 
அதன் பேரில் சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது, ஒவ்வொரு பகுதியிலும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் உடல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.
 
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரடியாக வந்து விசாரணை செய்தார்.
 
அதில் வீட்டில் பணிபுரியும் பெண் மற்றும் உறவினர்கள் வீட்டைச் சுற்றியுள்ள பலரிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது கொலையாக இருக்கும் என தெரிவித்தார். 
 
பின்னர் கொலை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் டெல்டா பிரிவு என நான்கு பிரிவுகளில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு தனிப்படை சிவந்தகுமார் பணியாற்றிய ஹைதராபாத்திற்கு விரைந்த நிலையில் சுகந்த குமாருடன் வசித்து வந்த அஞ்சும் சுல்தானாவிடம் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் கிடைக்கப்பெற்ற செல்போன்களில் எந்த ஒரு தகவலும் இல்லை எனவும் அதில் ஆதாரம் இருந்ததால் அதனை குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அளித்திருக்கலாம் எனவும் அந்தப் பகுதியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 
 
webdunia
இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் 150 பேருக்கும் மேலாக நடத்திய விசாரணையில் தற்பொழுது சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் அமீது ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இக்கொலை சம்பவத்தில் தனது தாய் சாவிற்கு காரணமான சுகந்த குமாரை கொலை செய்யும் நோக்கில் வீட்டிற்குச் சென்று அவரை கொலை  செய்ததாக சங்கர் ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தில், காராமணிக்குப்பம் ரயில்வே ட்ரேக்கில் விழுந்து எனது அம்மா தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் சுகந்த குமார்தான்.
 
அதனால் அவரை தீர்த்துக்கட்ட கடந்த ஆறு மாதமாக திட்டமிட்டு ஜூலை 13 ஆம் தேதி சுதன்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரை மட்டும் கொலை செய்ய முயற்சித்த போது அவரது அம்மா கமலேஸ்வரி என்னை தடுக்க முயன்றதால் அவரையும் கொலை செய்தேன். இருவரையும் கடைசியாக வெட்டி சாய்த்தேன். சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் அவனையும் கொலை செய்ய நினைத்து வீட்டில் இருந்த தலையணையை சிறுவன் முகத்தில் வைத்து அழுத்தி அதன் பிறகு அவனது கழுத்தை அறுத்தேன். 

மூவரையும் கொலை செய்த பிறகு நான் வெளியில் செல்லாமல் அதிகாலை 4.30 மணியளவில் தான் வீட்டில் இருந்து வெளியேறி மறுநாள் ஜூலை 14 ஆம் தேதி நண்பர்களுடன் சென்று பெட்ரோல் ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்தோம். பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்தோம் என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிமினல் வழக்குகளில் ஆளுநரை விசாரிக்க விலக்கு: பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு