பாஜக பிரமுகர் மீது விசிகவினர் தாக்குதல்! – பெண்கள் உட்பட 42 பேர் கைது!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (09:00 IST)
மதுரையில் பூத் கமிட்டி படிவம் வாங்க சென்ற பாஜகவினரை தாக்கியதாக விசிகவினர் 42 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனு தர்மம் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு பிறகு பாஜக – விசிக இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் பூத் கமிட்டி படிவம் வாங்க பாஜகவினர் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே இருந்த சில விசிகவினருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

வாக்குவாதம் கைகலப்பான நிலையில் விசிகவினர் பாஜகவினரை தாக்கியதுடன், அவர்களது வாகனத்தையும் நொறுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 18 பெண்கள் உட்பட 42 விசிகவினர் மீது கொலை தாக்குதல் முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments