Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியின் வைரவிழாவால் பாஜக அப்செட்: அடுத்த ரெய்டு திமுக பக்கம் தான்!

கருணாநிதியின் வைரவிழாவால் பாஜக அப்செட்: அடுத்த ரெய்டு திமுக பக்கம் தான்!

கருணாநிதியின் வைரவிழாவால் பாஜக அப்செட்: அடுத்த ரெய்டு திமுக பக்கம் தான்!
, சனி, 27 மே 2017 (15:25 IST)
திமுக தலைவர் கருணாநிதி தமிழக சட்டசபையில் அடியெடுத்துவைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து திமுக சார்பில் அவருக்கு வைர விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த வைரவிழா அரசியல் காரணங்களுக்காக இல்லை என திமுக கூறினாலும் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது.


 
 
வரும் ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் அன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு இந்தியாவின் முக்கியமான தலைவர்கள் வர உள்ளனர். ஆனால் பாஜக, அதிமுக போன்ற கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுக்காமல் புறக்கணித்துள்ளது.
 
ராகுல் காந்தி, லாலுபிரசாத் யாதவ், நித்திஷ் குமார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதனையடுத்து லாலுபிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் திமுக எதிர்க்கட்சிகளை அழைத்து கருணாநிதிக்கு வைரவிழா எடுக்க உள்ளது.
 
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு இந்த விழா ஒரு காரணமாக உள்ளதால் பாஜக இதனை முறியடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை மூலம் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தை போல திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
 
திமுகவின் முக்கிய தலைவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினால் இந்த விழாவில் கலந்து கொள்ள மற்ற கட்சி தலைவர்கள் சற்று யோசிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கணக்காம். ஆனால் திமுக இதற்கெல்லாம் பயப்படுமா அல்லது எதிர்கொண்டு வெற்றிகரமாக முடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிருந்தாவனம் -விமர்சனம்