Publish Date: Mon, 22 Nov 2021 (11:44 IST)
Updated Date: Mon, 22 Nov 2021 (11:46 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தொடர் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபடவுள்ளனர் என அறிவிப்பு.
கடந்த சில மாதங்களுக்கு முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை குறைவு காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல் விலை குறையவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
குறிப்பாக சென்னையில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தவுள்ளது என பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதன்படி தற்போது பாஜக சார்பில் போராட்டம் துவங்கியுள்ளது.
இது குறித்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, தமிழக அரசு பெட்ரோல் மற்றிம் டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தொடர் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபடவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.