Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்னம்மாவுக்கும் பன்னீருக்கும் மோடி வைக்க போகும் ஆப்பு

சின்னம்மாவுக்கும் பன்னீருக்கும்  மோடி  வைக்க போகும்  ஆப்பு
, சனி, 11 பிப்ரவரி 2017 (11:47 IST)
உண்மையில் தமிழகத்திற்கு இது ஒரு துன்பம் மிக்க, ஒரு துயரமான தருணம். வீர பெண்மணி மறைந்து விட்டார், அரசியல் சாணக்கியர் பீஷ்மர் முள் படுக்கையில் படுத்து இருக்கிறார். திராவிட தலைமைகளில் ஒன்றை முழுவதும் காலி செய்யக் கூடிய பிரமாஸ்திரத்தை ஏவி இருக்கிறார். இந்த பிரமாஸ்திரத்தின் சிறப்பு, களத்தில் உள்ள சின்னம்மாவையும்  பன்னீரையும் சம கால இடை வெளியில் காலி செய்வது.


 


சசிகலாவுக்கும் பன்னீருக்கும் நடப்பது பங்காளிகள்  சண்டை.

இந்த  பங்காளிகள்  சண்டையை  கவர்னர் மூலம், சரியாக காய் நகர்த்தி வருகிறார் மோடி. தமிழர்களுக்கு ஒரு பரம்பரை வியாதி உண்டு. அது ஒன்றை ஆதரிக்கும் போது தீவிரமாக ஆதரிப்பது, எதிர்க்கும் போது மிக தீவிரமாக எதிர்ப்பது. கடந்த காலங்களில் நாம் ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ, எம் ஜி ஆரையோ, ஓன்று கடுமையாக எதிர்த்து இருக்கிறோம் அல்லது கடுமையாக ஆதரித்து இருக்கிறோம் . தற்சமயம் நாம் சமூக வலை தளங்கள் மூலம் சசிகலாவை கடுமையாக எதிர்க்கிறோம் , பன்னீரை கடுமையாக ஆதரிக்கிறோம். அதன் ஒரு சாம்பிள் தான் ஆயம்மா,  ஆயம்மா டிவி, வேலைக்காரி, கொலைகாரி, கொள்ளைக்காரி, நொண்ணம்மா, என்ற நெடிய விமர்சனங்கள்.

தீவிரமாக ஆதரிக்கும் நாம் மறந்த விசயங்கள் இரண்டு,

ஓன்று, சசிகலா   கொள்ளைக்காரி என்போம் ஆனால் ராம்  மோகன் ராவ், ரெட்டி காருகள்,   திண்டுக்கல் ரத்தினம், கரூர் அன்பு நாதன், நத்தம் சீனி வாசன் போன்ற நல்லவர்களுடன் ஒபிஎஸ் அவர்களுடைய நெடு நாளைய நட்பு.

மற்றொன்று, சசிகலா கொலைகாரி என்போம் ஆனால் ஒபிஎஸ் தம்பி ராஜா அவர்களின் பூசாரி கொலை வழக்கு.

இறுதியாக கவர்னர் சொத்து குவிப்பு வழக்கு, எம் எல் ஏ க்கள் சிறை வைப்பு என்பதை   சுட்டி காட்டி சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க போவது இல்லை. ஒரு புறம் சசிகலாவையும் ஒபிஎஸ்யும் மோத விடுகிறார்  மோடி. மறு புறம்  மக்களை கொண்டே  சசிகலாவை வீழ்த்தி வருகிறார் ஆட்ட நாயகன் மோடி. சசிகலாவின் வீழ்ச்சி  தமிழகத்தில் கவர்னர் ஆட்சியின் உதயமாக பார்க்கப் படும்.

வெள்ளாடும் கசாப்பு கடைகாரனும்

 கிளிப்பிள்ளை தனது எஜமான் சொல்வதை சொல்வதை போல, மோடி சொல்கிறார் நம் ஒபிஎஸ் சொல்லி செய்கிறார் . ஆனால் அவர் வசதியாக மறந்த ஒரு விஷயம் இவர் சசிகலாவை நோக்கி வைக்கும் குற்றச் சாட்டுகள் அனைத்திலும் இவருக்கும் சிறு பங்கு உள்ளது. பல முறை பொங்காத  கோலி  சோடா திடீர் என பொங்கி வழிகின்றது.   கண்ணாடி கூண்டில் நின்று கல் வீசி கொண்டு இருக்கிறார்.

பெரும்பாலான அரசியல் நிபுணர்கள் ,  மத்திய அரசுக்கும் ஒபிஎஸ்க்கும்  உள்ள புரிதலை வேறு விதமாக அலசுகிறார்கள். உண்மையில் ஒபிஎஸ், பிஜேபி கூட்டணி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நல்ல முறையில் செயல்ப்பட்டு வருகிறார், அவரை மாற்ற சசிகலாவுக்கு என்ன அவசியம் வந்தது ? என டிவியில் பேசுபவர்கள் அனைவரும் பிஜேபியினரே. ஒபிஎஸ் மோடியுடன் வருங்காலத்தில் கூட்டணி இல்லை என சொல்ல முடியுமா என்ன ?

மொத்தத்தில் நாம் ஆடும் பொம்மைகளை பார்க்கிறோம் ஆட்டுவிப்பவனை நாம் பார்க்கவில்லை.  ஒரு வெள்ளாடு    கசாப்பு கடைகாரன் சொல்வதை கேட்கிறது. கசாப்பு கடைகாரனுக்கு நன்றாக தெரியும், ஆட்டை எப்போது வெட்டினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று.

 
webdunia

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிச்சயம் நல்ல முடிவு எடுப்பேன்: மாஃபா. பாண்டியராஜன் ட்வீட்!