Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பாஜகவினர் கைது.. அதிரடியாக குழு அமைத்த ஜேபி நட்டா..!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (10:40 IST)
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த குழுவில் சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் உள்ளதாகவும், இந்த குழு தமிழகத்திற்கு விரைவில் வருகை தந்து, பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் நடப்பட்ட பாஜக கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்  கைது செய்யப்பட்டனர்.

திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக அரசு, திமுக அரசு பாஜகவை ஒடுக்குவதற்காக இந்த கைதுகளை நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது. பாஜக அமைத்த குழுவின் அறிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments