பாஜகவில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அதிரடி.. நடிகை கவுதமி புகாரில் வழக்குப்பதிவு..!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (10:31 IST)
நடிகை கௌதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று காலை நடிகை கவுதமி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அடுத்த சிலமணி நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கவுதமியின் புகாரின் அடிப்படையில் அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் புகார் அளித்தார்.

அதேபோல் கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாகவும்  கௌதமி புகார் அளித்திருந்தார். கௌதமி அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments