Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகரில் பணத்தை இறக்கட்டும்; தேர்தலை நிறுத்துவோம் - பாஜக போடும் கணக்கு?

ஆர்.கே.நகரில் பணத்தை இறக்கட்டும்; தேர்தலை நிறுத்துவோம் - பாஜக போடும் கணக்கு?
, வெள்ளி, 24 மார்ச் 2017 (12:59 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்புழக்கத்தை காரணம் காட்டி தேர்தல் தள்ளி வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஓ.பி.எஸ் அணியின் சார்பில் மது சூதனன், இரட்டை மின் கம்ப சின்னத்திலும், தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. திமுக சார்பில் மருதுகணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், பலர் அங்கு போட்டியிட்டாலும், போட்டி என்னவோ இந்த 4 பேருக்குதான். 
 
அதேபோல், பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் குறைந்த அளவிலான வாக்குகளை பெறுவார் என்பதும், டெபாசிட் பெறுவதே கஷ்டம் என்பது தெரிந்தும் பாஜக அவரை நிறுத்தவது சம்பிராதயத்துக்குதான். 
 
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது பாஜகவிற்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக ஏற்கனவே தமிழிசை சவுந்தரரானும், ஹெச். ராஜாவும் அதை வரவேற்று கருத்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெற, தினகரன் தரப்பு எப்படியும் பணத்தை வாரி இறைக்கும். அதையே காரணம் காட்டி, தேர்தலை நிறுத்தி வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, தினகரன் தரப்பிலிருந்து பணப் பட்டுவாடா முதல் ரவுண்டு முடிந்து விட்டது என செய்திகள் வெளியானது. 
 
தற்போது அவருக்கு இரட்டை இலை சின்னமும் கிடைக்கவில்லை. எனவே, பல வருடங்களாக அந்த சின்னத்திற்கு தொடர்ந்து கிடைக்கும் ஒட்டுகள் தனக்கு கிடைக்காது என்பதை உணர்ந்துள்ள தினகரன் தரப்பு எப்படியும், பணத்தை இறைத்து தொப்பி சின்னத்தில் வெற்றி பெற முயற்சி செய்யும் என்பதை பாஜக தரப்பு உணர்ந்துள்ளது. 
 
எனவே, பணப்பட்டுவாடாவை மோப்பம் பிடிக்கவும், அதில் ஈடுபடுவர்களை கையும் களவுமாக பிடித்து தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகளிம் ஒப்படைக்கவும் ரகசிய உளவாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி அரவங்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. தினகரன் தரப்பு பணத்தை இறக்கினால், அதே ஆயுதத்தை ஆர்.கே.நகர் தொகுதியிலும் பிரயோகிக்க பாஜக விரும்புவதாக தெரிகிறது.
 
ஏற்கனவே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக என்ற பெயரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தலையும் நிறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக என்கிற கட்சியின் மீது மக்களுக்கு உள்ள அபிப்ராயத்தையே உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவின் வேட்புமனு தள்ளுபடி?: ஏகப்பட்ட குளறுபடிகள்!