முன்னேறாத மாநிலங்களின் மொழி 'ஹிந்தி என்றும், ஹிந்தியை பின்பற்றினால் 'சூத்திரர்களாகி' விடுவோம் என்றும் திமுக டி கே எஸ் இளங்கோவன் பேசிய நிலையில் இதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளர. அவர் இதுகுறித்து கூறியதாவது:
மொழி அரசியல் செய்து வந்த தி மு க மொழியோடு சாதியை இணைத்து அரசியல் செய்ய முனைவது பிரிவினை கருத்துகளை விதைப்பதற்கே.
நீதிக்கட்சியின் வழி வந்தவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் தி மு க இந்த பேச்சின் மூலம் தாங்கள் 'தலித்' மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு வருட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க, மொழியால், சாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் தி மு கவின் முயற்சி முறியடிக்கப்படும்