மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: பாஜக பிரமுகர்

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (19:09 IST)
இப்போது திமுக, காங்கிரஸ் எதிர்க்கும் திட்டங்கள் அனைத்துமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதில் திமுகவும் இணைந்திருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் தான் என்றும், அந்த திட்டங்களை இன்று இரண்டு கட்சிகளும் எதிர்ப்பதாகவும் பாஜக பிரமுகர் நாராயணன் இன்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறினார்
 
இன்று பிரச்சனைக்குரிய திட்டங்களாக திமுக குற்றஞ்சாட்டும் ஜிஎஸ்டி, நீட், கதிராமங்கலம், ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஜல்லிக்கட்டு உள்பட பல திட்டங்களை கொண்டு வர ஒப்புக்கொண்டது காங்கிரஸ்-திமுக ஆட்சி காலத்தில்தான். எனவே ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை எதிர்கட்சியாகும் போது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்ம் எதிர்ப்பது ஏன்? அப்படி அவை தவறென்றால், மக்களிடம் அந்த திட்டங்களை கொண்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்டு அதன்பின் எதிர்க்க வேண்டும் என்று நாராயணன் மேலும் கூறினார்.
 
ஆனால் திமுக தரப்பில் இருந்தும் காங்கிரஸ் தரப்பில் இருந்தும் இதற்கு கூறப்பட்ட விளக்கம் என்னவெனில் இந்த திட்டங்களை நாங்கள் கொண்டு வர முயற்சித்தபோது அந்த திட்டங்களை அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த பாஜக எதிர்த்தது ஏன்? என்றும், அப்படியானால் இந்த திட்டங்களை எதிர்த்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் இந்த திட்டங்களை கொண்டு வாருங்கள் என்றும் கூறினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments