டிடிவி தினகரனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாஜகவை திமுக குறை கூறுகிறது என்றால் சட்டவிரோத செயல்கள் செய்த டிடிவி தினகரனை திமுக ஆதரிக்கின்றதா? என்று பாஜக எம்பி இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன், 'தினகரன் மீதும் அவரை சார்ந்த சில பேர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது திராவிட முன்னேற்ற கழகம் தற்போது இந்த நடவடிக்கை எதற்காக என்று கேள்வி எழுப்புகிறது. திமுக யாரை ஆதரித்து குரல் எழுப்புகிறது? சட்டவிரோத செயல்களில் செயல்பட்டவர்களுக்கு ஆதரவாகவா திமுக குரல் கொடுப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன் மீதான நடவடைக்கைகளுக்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், சட்டம் தனது கடமையை சரியாக செய்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.