குறிவைத்து தாக்கப்படும் பாஜக பெண் எம்எல்ஏ
குறிவைத்து தாக்கப்படும் பாஜக பெண் எம்எல்ஏ
அசாம் மாநில பாஜக பெண் எம்எல்ஏவும் வை குறிவைத்து சிலர் சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனம் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்து, அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் போட்டியிட்ட 6 பெண் வேட்பாளர்களில் 2 பேர் வெற்றி பெற்றனர். அதில், பிரபல நடிகை அங்குர்லதா தேகாவும் ஒருவர்.
அசாம் மாநில, படாத்ரோபா தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கவுதம் போராவை சுமார் 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி கண்டார் நடிகை அங்குர்லதா தேகா.
இந்த நிலையில், நடிகை அங்குர்லதா தேகா குறித்து, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், அசாமில், பாஜக ஆட்சியைப் பிடிக்க நடிகை அங்குர்லதா தேகாவின் கவர்ச்சிதான் என்று எல்லை மீறியுள்ளனர்.இந்த தகவல் அறிந்த அவர் மிகவும் மனம் உடைந்துபோனார்.
இது போன்ற கருத்துகளை வெளியிட்டவர்களுக்கு, அசாம் ஒட்டுமொத்த திரையுலகினரும், பாஜக நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகத்திலேயே பெண்ணை தாயாகப் போற்றும் பெருமை கொண்ட நாடு நமது இந்தியா மட்டுமே. ஆனாலும், இந்த நாட்டில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து ஆபாச கருத்துக்களை அடுக்கும் நபர்களும் உள்ளதுதான் உள்ளபடியே வேதனை.