Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபை தேர்தலில் சாதித்த மு.க.ஸ்டாலின்!

சட்டசபை தேர்தலில் சாதித்த மு.க.ஸ்டாலின்!
, வியாழன், 26 மே 2016 (15:50 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஒரு வலிமையான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுகவின் இந்த வளர்ச்சிக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினே காரணம் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.


 
 
சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக 134 தொகுதிகளை பிடித்து மீண்டும் ஆட்சியமைத்தாலும், எதிர்கட்சியான திமுகவை விட மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. சிறய அளவிலான வாக்கு சதவீத வித்தியாசமே இரு கட்சிகளுக்கும் இடையே உள்ளன.
 
நமக்கு நாமே திட்டம் மூலம் பொதுமக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அக்கட்சியின் முக்கியமான பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் மு.க.ஸ்டாலின். அவரின் தேர்தல் பிரச்சார அனுகுமுறையே இந்த முறை வித்தியாசமாக இருந்தது.
 
அதன் பலன் தான் இந்த தேர்தலில் எந்த தொகுதியிலுமே திமுக டெபாசிட்டை இழக்கவில்லை என்ற சிறப்பு. 134 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக இரண்டு இடங்களில் டெபாசிட்டை இழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.
 
ஆனால் 174 தொகுதிகளில் போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, தான் தோல்வியடைந்த எந்த தொகுதிகளிலுமே டெபாசிட்டை இழக்கவில்லை. தோல்வியடைந்த அனைத்து தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.
 
104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 103 தொகுதிகளிலும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 25 தொகுதிகளிலும், 29 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 27 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ 25 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 25 தொகுதிகளிலும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 22 தொகுதிகளிலும், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 212 தொகுதிகளிலும், 232 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 2 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.
 
இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் டெபாசிட்டை இழக்காத ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் - சொல்கிறார் கி.வீரமணி