Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புறாவால் வந்த போர் – எதிர்வீட்டுக்காரரை இரும்புப்பைப்பால் தாக்கிய பாஜக பிரமுகர் !

Advertiesment
புறாவால் வந்த போர்  – எதிர்வீட்டுக்காரரை இரும்புப்பைப்பால் தாக்கிய பாஜக பிரமுகர் !
, சனி, 1 ஜூன் 2019 (10:57 IST)
தன் மகனைக் கண்டித்ததற்காக எதிர்வீட்டுக் காரரை கடுமையாக இரும்புப் பைப்பால் பாஜக பிரமுகர் ஒருவர் தாக்கியுள்ளார்.

சென்னை ஓட்டேரியில் வசிப்பவர் குணசேகரன். இவர் பாஜகவைல் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர் ரமேஷ். குணசேகரனின் மகனான அஜித் ரமேஷ் வீட்டு வாசலில் அமர்ந்து புறாவுக்கு தீனி வைத்து விளையாடிக்கொண்டிருக்க அதைப்பார்த்த ரமேஷ் அஜித்தை திட்டிக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் இரும்பு பைப்பை எடுத்து  ரமேஷைத் தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குணசேகரனைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமே சட்னி சாப்பிட தோணுமா..? கையேந்தி பவனில் ச்ச்ச்..சீ...