பாஜக பிரமுகர் எச். ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆன தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய வழக்கிலும், திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்கிலும், இரண்டு வழக்குகளில் எச். ராஜா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டது. இந்த இரண்டு பதிவுகளும் அவருடைய எக்ஸ் தலை பக்கத்திலிருந்து வெளியானவை என்று நிரூபிக்கப்பட்டது.
இதனை அடுத்து, இரு வழக்குகளிலும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எச். ராஜா கோரியதற்கமைய, அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Edited by Mahendran