Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (08:36 IST)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது என தெரியவந்துள்ளது. 

 
அண்ணாமலைக்கு மாநில அரசால் ’ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர் அவருக்கு சில கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை குறித்து அறிக்கை தயாரித்து நுண்ணறிவு பிரிவினர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளனர். 
 
இதன் அடிப்படையில் தற்போது அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Y பிரிவு பாதுகாப்பின் கீழ் அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments