Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை இல்லாத பாஜக தலையில் மிளகாய் அரைத்த அதிமுக??

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (11:21 IST)
பாஜக இடைத்தேர்தலில் சீட் வேண்டும் என கேட்டதாகவும் இருப்பினும் அதை கண்டுக்கொள்ளாமல் அதிமுக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரு கட்சிக்குள் மனஸ்தாபம் எழுந்துள்ளதாம். 
 
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளராக நா.புகழேந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சார்பாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன் படி விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் என்பவரும், நாங்குநேரியில் வெ.நாராயணன் என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அதிமுக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதை வைத்து பார்க்கும் போது அதிமுக, பாஜகவின் கோரிக்கையை நிராகரித்ததாகவே தெரிகிறது. ஆம், பாஜக இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட கேட்டதாக செய்திகள் வெளியானது. அதே போல் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என கூறினார். 
ஆனால், தமிழகத்தில் பாஜக தலைமையின்றி உள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா அளூநராக நியமிக்கப்பட்ட பின்னர், பாஜக தமிழக தலைவரை பாஜக டெல்லி மேலிடம் இன்னும் நியமிக்கவில்லை. இது பாஜவுக்கு ஒரு பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது. 
 
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதும், மற்ற கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த போது பாஜக சார்பில் தலைமை என்னும் பொருப்பில் இருந்து இது குறித்து பேச யாரும் வரவில்லை. ஒருவேளை தலைமை இருந்திருந்தால் இடைத்தேர்தல் குறித்து நிச்சயம் பேசியிருக்க கூடும். 
 
எனவே இதை சாக்காக பயன்படுத்திக்கொண்ட அதிமுக தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துவிட்டதாக கூட்டணி கட்சியான பாஜகவில் உள்ள முக்கிய சிலர் வருந்துவதாக நெருங்கிய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments