Publish Date: Thu, 12 Oct 2023 (07:38 IST)
Updated Date: Thu, 12 Oct 2023 (07:39 IST)
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி மற்றும் முன்னாள் எம்எல்ஏ எச் ராஜா கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு பத்தாம் தேதி நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து எச் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.H. ராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்