Publish Date: Mon, 14 Dec 2020 (19:53 IST)
Updated Date: Mon, 14 Dec 2020 (19:54 IST)
தமிழக சட்டப் பேரவை தேர்தல் வருகின்ற 2021ம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவில் ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, அண்ணாமலை, சசிகலா புஷ்பா, கனகசபாபதி, ராம ஸ்ரீநிவாசன், கார்வேந்தன், நாகராஜ், எஸ்.எஸ்.ஷா மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் பாஜகவின் அறிவுசார் குழுவின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற ஜோதிடர் ஷெல்லி பெயர் இடம்பெறாமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருவதாக பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் குஷ்புவும் இந்த குழுவுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜகவும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது