Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபின் கடத்திய அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கம்: பாஜக அதிரடி

Advertiesment
அபின் கடத்திய அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கம்: பாஜக அதிரடி
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:45 IST)
பாஜக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவரும், ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினருமான அடைக்கலராஜ் என்பவர் உள்பட ஐந்து பேர் அபின் கடத்தல் வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
கரு நாகராஜ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்ட அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது. 
 
இவ்வாறு கரு.நாகராஜ் அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏளன சிரிப்பு...பத்தாம் வகுப்பு தேர்ச்சி…போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மாணவர்!