Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: பாஜக அதிரடி முடிவு!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (07:59 IST)
கடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட்ட பாஜக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர் மற்றும் 100 வார்டு கவுன்சிலர் பதவியை பிடிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் தான் போட்டி என்ற வகையில் அவர் பேட்டி அளித்து வருகிறார் 
 
அதை உண்மையாக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் தங்களுடைய எதிர்க்கட்சி திமுக தான் என்று பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர் பதவியை பிடிக்க தீவிரமாக் செயல்பட்டு, தாமரை சின்னத்தில் அனைவரையும் வெற்றி பெற வைக்க பட்டிதொட்டியெங்கும் கட்சியை வளர்க்கப் பாடுபடப் போவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். பாஜகவினர்களின் இந்த திட்டம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments