Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுனர் பதவி! – குடியரசு தலைவர் அறிவிப்பு!

Advertiesment
Radhakrishnan
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (09:59 IST)
தமிழ்நாடு பாஜக கட்சியின் முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுனராக நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆளுனர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் தற்போது சில மாநிலங்களுக்கான ஆளுனர்களை மாற்றியமைத்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுனராக இருந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நாகலாந்து ஆளுனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோரை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் கொள்ளை! – திருவண்ணாமலையில் மர்ம கும்பல் கைவரிசை!