Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Advertiesment
திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

J.Durai

, வெள்ளி, 19 ஜூலை 2024 (15:02 IST)
மதுரை அருகே, உள்ள ஒத்தக்கடை நரசிங்கம் சாலையில், கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கிழக்கு மாவட்டத் தலைவரும் வழக்கறிஞருமான ராஜசிம்மன் தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
இதில், மதுரை எம்.பி கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி வெங்கடேசனின் செங்கோல் பற்றிய அவதூறு பேச்சுக்களை கண்டித்தும், தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் மின் கட்டண சேவைகள் உயர்வினை கண்டித்தும், வழிப்பறி கொள்ளை, கொலை, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து இறந்த சம்பவம் ஆகியவற்றை தடுத்து  சட்ட ஒழுங்கை காக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
 
ஆர்ப்பாட்டத்தில், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். 
 
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு- காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்!