Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓகே சொன்ன ஓபிஎஸ்.. தயக்கம் காட்டும் டிடிவி தினகரன்.. பாஜக நிபந்தனையால் பரபரப்பு..!

Advertiesment
ttv dinakaran-pannersalvam

Mahendran

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (11:43 IST)
பாஜக கூட்டணியில்  இணைய டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் பாஜக விதித்த ஒரு முக்கிய நிபந்தனையை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டதாகவும் ஆனால் டிடிவி தினகரன் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று கூட்டணிகள் போட்டியிட இருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் ஏற்கனவே ஜிகே வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் உள்ளிட்டவர்களின் கட்சிகள் இணைந்த நிலையில் அடுத்த கட்டமாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இது குறித்து நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஓபிஎஸ் அணிக்கு இரண்டு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தர பாஜக ஒப்புக்கொண்டதாகவும் அதே போல் டிடிவி தினகரனுக்கு 5 தொகுதிகள் தர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் இந்த இரு அணிகளும் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நபர்ந்தனையை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டாலும் டிடிவி தினகரன் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் நடந்து சென்றபோது வந்த பிரசவ வலி.. தக்க நேரத்தில் உதவிய செவிலியர்கள்..!