Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்: காவல்துறையில் பா.ஜ.கவினர் புகார்

Advertiesment
udhayandhi brick
, திங்கள், 27 ஜூன் 2022 (18:27 IST)
எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்: காவல்துறையில் பா.ஜ.கவினர் புகார்
எய்ம்ஸ் செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார் என பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நடப்பட்டிருந்த செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்
 
இதுகுறித்து புகார் அளித்தவுடன் பேட்டி அளித்த அவர்கள் ’உதயநிதி செய்த இந்தச் செயல் மத்திய அரசின் திட்டத்தை இழிவுபடுத்துவது போல் அமைந்துள்ளது என்றும் அரசு கட்டிடம் கட்டுவதற்காக நடப்பட்டிருந்த செங்கலை திருடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுத்த அரசு, அதிகாரிகள் மீது எடுக்காதது ஏன்? கமல்ஹாசன்