பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (08:09 IST)
பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம் என அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

 சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் புதுவையில் தேர்தல் தோல்விக்கு மாநில தலைவர் செல்வகணபதி தான் காரணம் என்று பாஜக மாநில செயலாளர் ரத்தினவேல் என்பவர் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்

இதனை அடுத்து நேற்று அவர் தற்காலிகமாக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகும் ரத்தினவேல் அரை நிர்வாண போராட்டத்தை தொடர்ந்ததால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜக மாநில பாஜக தலைவர் செல்வகணபதியின் இந்த அதிரடி நடவடிக்கை புதுவை பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ரத்தினவேல் 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments