ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகிகள் திடீர் அதிருப்தி.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:27 IST)
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவர் மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இருக்கும் நிலையில் ஆங்காங்கே அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு அவர்கள் வாக்கு சேகரிக்காமல் ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் குவிந்து விட்டதாகவும் அங்கு அவர்கள் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜக வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராமநாதபுரத்திற்கு சென்று விட்டதை அடைந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இது குறித்து ஓபிஎஸ் அவர்களிடமும் பேசியதாகவும் தெரிகிறது. ஓபிஎஸ் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாகவும் தேர்தல் முடிந்த பிறகு இந்த அதிருப்தி கோபமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’மோந்தா’ புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும்? வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!

கர்நாடக அமைச்சரவையில் 'காமராஜ் திட்டம்' அமல்? 12 மூத்த அமைச்சர்களுக்குக் 'கல்தா'

அதானிக்கு ரூ.33,000 கோடி ரகசியமாக நிதி வழங்கியதா மத்திய அரசு? வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகளிடம் காட்டவில்லை': நயினார் நாகேந்திரன்

சாலையில் இருந்த குழியால் பெண் வங்கி அதிகாரி பரிதாப பலி.. மோசமான சாலையை செப்பனிடாததால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments