Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மக்களிடம் நான் கொண்டுள்ள உறவு -ராகுல்காந்தி

SInoj
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:09 IST)
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  நிலையில், அனைத்துக் கட்சிகளும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டி, இன்று தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ள காங்., மூத்த தலைவர் ராகுல் காந்தி, நெல்லையில் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 8 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.
 
அப்போது அவர் கூறியதாவது: 

நான் எப்போதெல்லாம் இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். பெரியார் அண்ணா, காமராஜர் போன்ற ஆளுமைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
 
சமூக நீதி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு ஒரு முன்னுதாரணம். அதனால்தான் இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ் நட்டில் இருந்து தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிகமான அன்பைத் தருகிறது தமிழ் நாடு. தமிழ் நாடு மக்களிடன் நான் கொண்டுள்ள உறவு அரசியல் இல்லை. அது குடும்ப உறவு. அதனால் தான் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ் நாட்டு விவசாயிகள் போராடியபோது வருத்தப்பட்டேன். இந்தியாவில் இருக்கிற எல்லா கலாச்சாரங்களும் பண்பாடுகளும், மிகப்புனிதமானவை என்று கருதுகிறோம். ஆனால் அவர்களோ, ’ஒரே  நாடு’ ’ஒரே தலைவர்கள்’ ’ஒரே மொழி ’என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments