கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
நேற்று முன்தினம் கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் அதிபர்களிடம் கலந்துரையாடல் செய்த போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரி குறித்து நகைச்சுவையாக சில கருத்துக்களை பேசினார்.
அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் திடீரென நேற்று அவர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ள நிலையில் லண்டனில் இருக்கும் அண்ணாமலை இந்த வீடியோவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதி அமைச்சர் இடம் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட கோவை பாஜக நிர்வாகி சதீஷ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.