Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓவியாவை அழ வைத்த பிக்பாஸ் டீம் - பரபரப்பு வீடியோ

Advertiesment
ஓவியாவை அழ வைத்த பிக்பாஸ் டீம் - பரபரப்பு வீடியோ
, வெள்ளி, 21 ஜூலை 2017 (13:17 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது.


 

 
இந்நிலையில், இன்று இடம் பெறும் காட்சிகள் என விஜய் தொலைக்காட்சி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், ஜூலி உட்பட மற்ற அனைவரும் ஓவியாவிற்கு எதிராக  கருத்து தெரிவிக்கின்றனர்.  மேலும், ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என அவர்கள் அனைவரும் கேமரா வழியாக பிக்பாஸிடம் முறையிடுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட ஓவியா கண்ணீர் விடுகிறார்.
 
ஓவியா கண்னீர் விடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் பலரும், ஓவியாவிற்கு ஆதரவாகவும், ஜூலி உள்ளிட்ட மற்றவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
எப்போதும் சிரித்திக்கொண்டே இருந்த ஓவியாவை அழ வைத்து விட்டார்கள் என ஏகத்திற்கும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.
 
இது தொடர்பான முழுமையான விபரங்கள் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறும் எனத்தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ 4ஜி போன் முற்றிலும் இலவசம் - முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு