Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாகவி பாரதியாரின் பேத்தி காலமானார்: அரசியல்வாதிகள், திரையுலகினர் இரங்கல்!

lalitha bharathi
, திங்கள், 26 டிசம்பர் 2022 (15:05 IST)
மகாகவி பாரதியாரின் பேத்தி காலமானார்: அரசியல்வாதிகள், திரையுலகினர் இரங்கல்!
 மகாகவி பாரதியார் பேத்தி லலிதா பாரதி என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94 என்றும் கூறப்படுகிறது. 
 
மகாகவி பாரதியார் பேத்தி லலிதா பாரதி ஒரு இசைக்கலைஞர் என்பதும் பல குழந்தைகளுக்கு இசையை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பாரதியாரின் நூல்களை இசை வடிவமாக்க அவர் பெரும் பங்காற்றியுள்ளார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணிக்கு லலிதா பாரதி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 
 
மறைந்த லலிதா பாரதியின் மகன் ராஜ்குமார் பாரதி, இளையராஜா உள்பட பல பிரபலங்களின் இசையமைப்பில் பாடியுள்ளார் என்பதும் இவர் ஒரு சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் லலிதா பாரதியின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறிஸ்தவர்களாய் மாறிய கொஞ்ச நாளில் மீண்டும் இந்துக்களான மக்கள்! – மத்திய பிரதேசத்தில் சுவாரஸ்யம்!