Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜே.இ.இ(JEE) தேர்வில் தேசிய சிறப்பிடம் பெற்ற பரணி வித்யாலயா மாணவர்கள்

Advertiesment
karur
, வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (22:28 IST)
நிகழாண்டு ஜே.இ.இ மெயின் தேர்வில் பரணி வித்யாலயா மாணவர்கள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பரணி வித்யாலயா மாணவி அக்‌ஷயா 500க்கு 497 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். இவர்களுக்கு பாராட்டு விழா, பரணி வித்யாலயா மற்றும் பரணி பார்க் பள்ளிகளின் இளையோர் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்கள்  நடைபெற்றது.
 
இவ்விழாவில் முதல் நாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கரூர் கோட்டாட்சியர் செல்வி.பா.ரூபினா, கடந்த ஆண்டு சி்.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவி அக்‌ஷயாக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.25,000/- ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மேலும்  ஜே.இ.இ. 2023 மெயின் தேர்வில் தேசிய சிறப்பிடம் பெற்ற ரவீனா (98.1 பெர்சண்டைல்), பிரேம் குமார் (97.3 பெர்சண்டைல்) மற்றும் அபிஷேக்.எஸ்.பிஜூ (96.9 பெர்சண்டைல்), நதீஸ் (92.9 பெர்சண்டைல்), கிஷோர்குமார் (92.6 பெர்சண்டைல்) மற்றும்  ருக்மாங்கதன் (92.6 பெர்சண்டைல்) ஆகியோரை வாழ்த்தி, பரிசுகள் வழங்கி பாராட்டினர். பரணி பார்க் வித்யாலயா பள்ளிகளில் நீட், ஜே.இ.இ பயிற்சி குரோத் அகாடமியால் அனுபவம் வாய்ந்த ஆந்திரா ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரண்டு நாட்கள் நடைபெற்ற இளையோர் ஆண்டு விழாவில் குட்டிக் குழந்தைகளின் சுட்டித் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மிக்ச் சிறப்பாக பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்தது.
 
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் முனைவர்.S.உமா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
 
இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன்,  அறங்காவலர்  சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், ஜப்பான் கல்வியாளர் யூகிசான்  முன்னிலை வகித்தனர்.
            
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் S.சுதாதேவி,  பரணி பார்க் பள்ளி முதல்வர் K.சேகர், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வி.எஸ்.பி.கவிதா, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும்  இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
  
புகைப்படம்: 
 
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவி அக்‌ஷயாக்கு ரூ.25,000/- ரொக்கப்பரிசு  மற்றும் ஜே.இ.இ. 2023 மெயின் தேர்வில் தேசிய சிறப்பிடம் பெற்ற ரவீனா (98.1 பெர்சண்டைல்), பிரேம் குமார் (97.3 பெர்சண்டைல்) மற்றும் அபிஷேக்.எஸ்.பிஜூ (96.9 பெர்சண்டைல்), நதீஸ் (92.9 பெர்சண்டைல்), கிஷோர்குமார் (92.6 பெர்சண்டைல்) மற்றும்  ருக்மாங்கதன் (92.6 பெர்சண்டைல்)ஆகியோரை கரூர் கோட்டாட்சியர் செல்வி.பா.ரூபினா பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்வு அருகில் பரணிபார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், ஜப்பான் கல்வியாளர் யூகிசான் மற்றும் பள்ளி நிர்வாகிகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயனூர் காவிரி ஆற்றில் மாணவிகள் உயிரிழந்த விவகாரம், அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன் ? பாஜக கேள்வி ?