Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:19 IST)
சென்னை  கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு பணி காரணமாக இன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று ஒரு நாள் மட்டும் சென்னை  கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை இடையே காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரை மட்டும் இயங்கும்.

மேலும் செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரையில் காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையில் இயங்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments