சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

Mahendran
சனி, 21 செப்டம்பர் 2024 (14:38 IST)
சென்னையில், பொதுப் போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தினமும் பல எண்ணிக்கையிலான மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் அவ்வப்போது  பராமரிப்பு காரணமாக, மின்சார ரயில் சேவைகள் சில வழித்தடங்களில் முழுமையாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால், சென்னை தாம்பரம் - கடற்கரை வரையிலான மின்சார ரயில் சேவை நாளை, செப்டம்பர் 22-ஆம் தேதி, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக, சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அமெரிக்க மாகாண ஆளுனர், அட்டர்னி ஜெனரல் தேர்தல்.. டிரம்ப் கட்சி படுதோல்வி..!

Gen Z எனப்படும் இளைஞர்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பார்கள்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

மகாத்மா காந்தியின் 3 குரங்குகள்.. ராகுல், அகிலேஷ், தேஜஸ்வியை விமர்சித்த யோகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments