Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமிக்கு 2 திருமணம்; கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில்..! – பவானியில் பரபரப்பு!

Advertiesment
சிறுமிக்கு 2 திருமணம்; கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில்..! – பவானியில் பரபரப்பு!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (11:24 IST)
பவானியில் சிறுமியை திருமணம் செய்த கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அப்புசாமி. இவர் கடந்த 7 மாதத்திற்கும் முன்னதாக 18 வயது பூர்த்தியடையாத தனது மகளை காமராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஏற்கனவே அஜித் என்ற நபரை அந்த பெண் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்டு சென்றுள்ளனர்.

விசாரணையில் மேற்கண்ட சம்பவங்கள் தெரிய வர கணவன் காமராஜ், காதலன் அஜித், பெண்ணின் பெற்றோர்கள், காமராஜின் பெற்றோர்கள் என மொத்தம் 6 பேரை போலீஸார் போக்சோ மற்றும் குழந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 சீன ஹேக்கர்கள்; முடங்கிய அமெரிக்க நிறுவனங்கள்! – அமெரிக்கா பரபரப்பு புகார்!